உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கியிருந்த விடுதியில் பறக்கும் படை சோதனை

அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கியிருந்த விடுதியில் பறக்கும் படை சோதனை

பெரியகுளம் : பெரியகுளத்தில் அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கி இருந்த தனியார் விடுதியில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.தேனி லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் போட்டியிடுகிறார். தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பணியாற்றுவதற்காக தஞ்சாவூர், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநிலநிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தேனி தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆனந்தன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தனித்தனி அறைகளில் தங்கி உள்ளனர்.இவருடன் சில நிர்வாகிகளும் உள்ளனர். இந்நிலையில் நிர்வாகிகள் அறைகளில் பணம் வைத்திருப்பதாக வருமான வரித்துறைகளுக்கு ரகசிய தகவல் சென்றது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11:30 மணி முதல் 12:30 வரை பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்து மாதவன், வருமானவரித்துறையினர் நான்கு பேர், பறக்கும் படையினர் அறைகளில் சோதனையிட்டனர். பைகள், சூட்கேசுகள்,பீரோக்கள், கட்டில், மெத்தையில் சோதனையிட்டனர். இதில் எந்த ஆவணமும், பணமும் கிடைக்கவில்லை. ஆர்.டி.ஓ.,முத்து மாதவன் கூறுகையில்: வருமான வரித்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. லோக்சபா தேர்தல்நடைபெற உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் இந்த சோதனையின் போது உடன் இருந்தனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை