உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளிகளில் தினமும் நீட் பயிற்சி வழங்க ஆணை வெளியிட வேண்டும்

பள்ளிகளில் தினமும் நீட் பயிற்சி வழங்க ஆணை வெளியிட வேண்டும்

தேனி : அரசு, உதவி பெறும் பள்ளிகளில் வேலை நாட்களில் கடைசி பாட வேளையில் 'நீட்' பயிற்சி வகுப்பு எடுத்திட அரசு வழிகாட்டுதல் ஆணை வெளியிட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் அன்பழகன் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளதாவது: பள்ளி கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் படி அரசு, உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே 2 வரை நீட் பயிற்சி மாவட்டத்திற்கு இரு இடங்களில் நடக்க உள்ளது. வேலை நாட்கள், கோடை விடுமுறையில் நடக்க உள்ள பயிற்சி வகுப்புகளுக்கு பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம், ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டும். இவை கடந்தாண்டு வழங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டன. வரும் கல்வியாண்டில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் வேலைநாட்களில் கடைசி பாட வேளையை 'நீட்' பயிற்சி வழங்க வழிகாட்டுதல் ஆணை வெளியிட வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அளவில் பயிற்சி மையங்கள் அமைத்திட வேண்டும். ஏழை மாணவர்கள் கனவை தமிழக அரசு நினைவாக்கிட வேண்டும். 'நீட்' பயிலும் மாணவர்கள், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு கையேடுவழங்கிட கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை