உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலசுப்பிரமணியர் கோயிலில் வருடாபிஷேக விழா

பாலசுப்பிரமணியர் கோயிலில் வருடாபிஷேக விழா

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆறாம் ஆண்டு வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. இங்கு பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தனித்தனி கொடிமரம் உள்ளது விசேஷமானது. ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட இக் கோயிலில் 2018 ல் கும்பாபிேஷகம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஆறாம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது. முன்னதாக கும்பங்களுக்கு கலச பூஜையை, அர்ச்சகர் கார்த்திக் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர். கலசத்தில் இருந்த தீர்த்தத்தினை பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு ஊற்றியும், பல்வேறு திரவியம் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர்கள் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர் சசிதரன், சிதம்பர சூரியவேலு, பா.ஜ., வர்த்தக அணி தலைவர் கோபி கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி