மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
16-Aug-2024
தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன். நாடார் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பூரணசெல்வி. இருவரும் ஆசிரியர் தினத்தில் சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, மகேஷிடம் நல்லாசியர் விருது பெற்றனர். கல்வித்துறையில் கற்பித்தல் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து, உறவின்முறைக்கு பெருமை சேர்த்த இவர்களை பாராட்டு விழா நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறவின்முறை நிர்வாகிகள் இணைந்து, இரு ஆசிரியர்களையும் கவுரவித்தனர். ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர். விழாவை ஆண்கள் பள்ளிச் செயலாளர் முருகன், மெட்ரிக் பள்ளிச் செயலாளர் நவமணி, இணைச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
16-Aug-2024