உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிரைவர் மீது தாக்குதல்: மூவர் கைது

டிரைவர் மீது தாக்குதல்: மூவர் கைது

மூணாறு : மூணாறு அருகே மாங்குளம் ஆன குளத்தில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.மாங்குளம் ஆனக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷாஜி மாத்யூ 50. இவர், மகன் அபிஜித்துடன் ஏப்.28ல் ஆட்டோவில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தேவசியா 61, ஜஸ்டின்ஜோய் 27, சனீஷ் 25, ஆகியோர் ஆட்டோவை வழி மறித்தனர். ஆட்டோவில் இருந்து ஷாஜிமாத்யூவை வலுகட்டயமாக வெளியில் இழுத்து அரிவாளால் வெட்டினர். அதனை தடுக்கச் சென்ற மகன் அபிஜித்தையும் வெட்டினர். இருவரும் பலத்த காயமடைந்தனர். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை