உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி பலாத்காரம் ஆட்டோ டிரைவர் கைது

சிறுமி பலாத்காரம் ஆட்டோ டிரைவர் கைது

மூணாறு : மூணாறு அருகே மாங்குளத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை ' போக்சோ' வில் போலீசார் கைது செய்தனர்.மாங்குளத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஜிபின்ஆப்ரகாம் 27. இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.அச்சம்பவம் வெளியில் தெரிந்ததால் தலைமறைவானார். மூணாறு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி உத்தரவுபடி எஸ்.ஐ. அஜேஷ் கே ஜான் தலைமையில் போலீசார் உடுமலைபேட்டையில் தலைமறைவாக இருந்த ஜிபின்ஆப்ரகாமை' போக்சோ' வில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை