மேலும் செய்திகள்
கொலை மிரட்டல்: இருவர் மீது வழக்கு
19-Feb-2025
தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டி மேட்டுவளவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பையா 47. இவரது நண்பர் ரவி 40. மற்றொரு நண்பர் உட்பட 3 பேர், தேவதானப்பட்டி வைகை அணை ரோடு, தனியார் மதுபாருக்கு நேற்று மதியம் மது குடிக்க சென்றனர். அப்போது கருப்பையா மயங்கி விழுந்தார். அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தும் எழவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மதுபோதையில் இறந்தாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என ஆய்வில் தெரியவரும் என தேவதானப்பட்டி போலீசார் தெரிவித்தனர்.-
19-Feb-2025