உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி ரோட்டில் இடையூறு புளியமரங்களை அகற்ற இன்று ஏலம்

தேனி ரோட்டில் இடையூறு புளியமரங்களை அகற்ற இன்று ஏலம்

தேனி: தேனி பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள புளிய மரங்களை அகற்றுவதற்கான ஏலம் இன்று நடக்கிறது.தேனி பெரியகுளம் ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்த ரோட்டில் ரயில்வே கேட் முதல் பொம்மைய கவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோயில் வரை ரோட்டையொட்டி 23 மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் உள்ள இடங்களை சிலர் ஆக்கிரமித்து கடைநடத்துகின்றனர். இதனால் 7 மீ., அகலம் இருக்க வேண்டிய ரோடு பல இடங்களில் சுருங்கி உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக தேனி போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், அல்லிநகரம் எஸ்.என்.ஆர்., ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதுபோன்ற மரங்களை வெட்டி அகற்ற இன்று தேனி போலீஸ் ஸ்டேஷன் எதிரில் காலை 11:00 மணிக்கு நடக்கிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் 'கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலை, தேனி' என்ற பெயரில் ரூ.30ஆயிரத்திற்கான வரைவோலையுடன் பங்கேற்கலாம். என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிதெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை