உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி பஸ் ஸ்டாண்டில் குப்பைக்கு தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு

தேனி பஸ் ஸ்டாண்டில் குப்பைக்கு தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு

தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்டில் குப்பைக்கு தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பயணிகளும் பாதிக்கபடுகின்றனர்.தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்ட் நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு 3 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் 2 பிளாட்பாரத்தின் முடிவில் மூணாறு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில் சேரும் குப்பை பிளாட்பாரம் அருகில் கொட்டப்படுகிறது. இதனை நகராட்சியினர் முறையாக அப்புறப்படுத்துவதில்லை. சில நேரங்களில் காலையில் குப்பைக்கு தீ வைக்கின்றனர். இதில் இருந்து எழும் புகை பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பரவி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. காலையில் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பலரும் நச்சுப்புகையினால் பாதிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்டில் சேரும் குப்பையை உரிய முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை