உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விஷபூச்சி நடமாட்டத்தை தடுக்க புதர்கள் அகற்றப்படுமா? பாலசுப்பிரமணியர் பக்தர்கள் கோரிக்கை

விஷபூச்சி நடமாட்டத்தை தடுக்க புதர்கள் அகற்றப்படுமா? பாலசுப்பிரமணியர் பக்தர்கள் கோரிக்கை

பெரியகுளம் : 'ஆயிரம் ஆண்டு பழமையான பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் வளாகத்தில் புதர் மண்டி கிடப்பதால் அதனை அகற்றவும், ஹைமாஸ் விளக்கு அனைத்தும் இரவில் எரிவதற்கு அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டது. இதன் அருகே வராகநதியில் வலது, இடது கரையில் அமைந்துள்ள ஆண், பெண் மருத மரங்களுக்கு நடுவே குளித்து, பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரரை வணங்குவது உத்திரபிரதேச மாநிலம் காசிக்கு சென்றதற்கு நிகரானது என்பது ஐதீகம். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம், தைப்பூசம், திருக்கல்யாணம் உட்பட, ஏராளமான பூஜைகள் நடக்கும். கோயில் அருகாமையில் ஒரு ஏக்கர் நிலத்தில் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதில் ஏராளமான விஷ பூச்சிகள் உள்ளன. இதனை அகற்ற வேண்டும். மேலும் வளாகத்தில் 16 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் 8 விளக்குகளில் 3 மட்டுமே எரிந்து வெளிச்சம் பாய்ச்சுகின்றன. மீதமுள்ள எரியாத விளக்குகளால் அப்பகுதி இரவு நேரத்திலும், அதிகாலையிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. விளக்குகளை சீரமைத்து, கோயில் வளாகத்தில் கூடுதல் வெளிச்சம் பாய்ச்ச நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை