உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேட்பாளர்கள் பிரசாரத்தில் உளவு பார்க்கும் மாற்று கட்சியினர்

வேட்பாளர்கள் பிரசாரத்தில் உளவு பார்க்கும் மாற்று கட்சியினர்

பெரியகுளம் : வேட்பாளர்கள் பேசுவதை எதிர்கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் 'உளவு' பார்த்து, தங்கள் கட்சி கூட்டத்தை அதிகரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.தேனி லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன், தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மும்முனை போட்டி நிலவுகிறது. இதிலும் தினகரன், தங்கதமிழ் செல்வன் ஒருவரையொருவர் நாசூக்காக விமர்ச்சிப்பதை வாக்காளர்கள் கவனித்து ரசிக்கின்றனர். மார்ச் 25ல் பெரியகுளம் ஒன்றியப் பகுதிகளில் தினகரன் ஓட்டு சேகரித்தார். அப்போது மக்களோடு மக்களாக கலந்த தி.மு.க.,வினர் சிலர் தினகரன் என்ன பேசுகிறார், கூட்டம் எவ்வளவு சேர்ந்துள்ளது என கண்காணித்தனர். இதே போல் மார்ச் 28ல் பெரியகுளம் ஒன்றியப் பகுதிகளில் தங்க தமிழ்ச்செல்வன் ஓட்டு சேகரித்தார். இதில் அ.ம.மு.க., கட்சியினர் சிலர் கண்காணித்தனர். இவர்கள் இருவரது பேச்சுக்களையும், கூட்டங்களையும் அ.தி.மு.க., செயலாளர்கள், கண்காணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை