உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மருமகனுக்கு கத்திக்குத்து மாமனார் மீது வழக்கு

மருமகனுக்கு கத்திக்குத்து மாமனார் மீது வழக்கு

தேனி: வீரபாண்டி ஜங்கால்பட்டி மேற்குத்தெரு பாலமுருகன் 33. கொடைக்கானலில் 'சென்ட்ரிங்' தொழில் செய்கிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். பாலமுருகன் தனது மனைவியிடம் அடிக்கடி அலைபேசியில் பேசினார். இதனை பாலமுருகனின் மாமனார் கண்ணன் கண்டித்தார். இதனால் மருமகன், மாமனார் இடையே தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து ஜங்கால்பட்டி வந்த பாலமுருகன், காமாட்சிபுரம் ரோட்டில் நின்றிருந்தார். அங்கு சென்ற மாமனார் கண்ணன், கத்தியால் பாலமுருகனை குத்தி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். காயமடைந்த பாலமுருகன், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை