உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணை அடித்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

பெண்ணை அடித்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

பெரியகுளம் : பெரியகுளம் தெற்குபுதுத்தெருவைச் சேர்ந்த திலிப்ராஜா 34. இவரது மனைவி ஹலிமாபானு 30. இவர்களுக்கு 2015ல் திருமணம் நடந்தது.3 மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் ஹலிமாபானு ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் திலிப்ராஜா மனைவியை சமாதனம் செய்து கடந்த ஒரு ஆண்டாக ஒன்றாக வாழ்ந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு செல்லக்கூடாது என கூறி 'டேபிள் பேனால்' ஹலிமா பானுவை, திலிப் ராஜா அடித்துள்ளார். திலிப்ராஜா தாய் ஆயிஷாபேகம், சகோதரி பெனாசீர் பரிதா, தந்தை சாகுல் ஹமீது ஆகியோர் ஹலிமாபானுவை கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ