உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக, உச்ச நீதிமன்ற பரிந்துரையின் படி, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரும், தேசிய அணைகள் பாதுகாப்பு அலுவலருமான ராகேஷ் காஷ்யப் தலைமையில் மத்திய கண்காணிப்பு குழு உள்ளது. இக்குழு ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அணையில் நடைபெற வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும். இக்குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலர் அசோக் குமார் சிங், நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் பிரியேஷ் இடம் பெற்றுள்ளனர். இக்குழு 2023 மார்ச் 27ல் அணையின் நீர்மட்டம், 116.75 அடியாக இருந்தபோது அணை பகுதியில் ஆய்வு நடத்தியது. அதன் பின், நேற்று இக்குழு ஆய்வு மேற்கொண்டது. அணையில் நீர்மட்டம் நேற்று 118.85 அடியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை