உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை, டாக்டர்கள் தேவை

சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை, டாக்டர்கள் தேவை

சின்னமனூர் : சின்னமனூர் அரசு மருத்துவமனையில் 54 படுக்கைகள், ஒரு ஆப்பரேஷன் தியேட்டர் உள்ளது. மாதத்திற்கு ஒற்றை இலக்கத்தில் கூட பிரசவம் நடப்பது இல்லை. இதற்கு காரணம் போதிய டாக்டர்கள் இல்லை. அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தால் வெளியில் இருந்து டாக்டர்களை அழைத்து கொள்கின்றனர். இந்த அவலநிலையிலான மருத்துவமனையை நம்பி சின்னமனூர்,ஒடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழநி, காமாட்சிபுரம், சுக்காங்கல்பட்டி, கன்னிசேர்வைபட்டி, அப்பிபட்டி, முத்துலாபுரம், சீப்பாலக்கோட்டை, முத்துலாபுரம், எரசை, வேப்பம்பட்டி, சீலையம்பட்டி, மார்க்கையன்கோட்டை, குச்சனூர், அய்யம்பட்டி, புலி குத்தி, சிந்தலச்சேரி என கிராமங்களின் பட்டியல் நீள்கிறது. இது தவிர ஹைவேவிஸ் மலையில் உள்ள மகாராஜா மெட்டு, இரவங்கலாறு, மணலாறு, வெண்ணியாறு பகுதிகளில் வசிப்பவர்களும் இங்கு தான் வர வேண்டும். ஆனால் இங்கு போதிய டாக்டர்கள், நவீன ஆய்வக வசதிகள் இல்லை. படுக்கை வசதியும் மிக குறைவு என இல்லை என்ற பட்டியல் நீள்கிறது. தற்போது இருக்கின்ற வசதிகளை வைத்து டாக்டர்கள் சமாளித்து வருகின்றனர். இருந்த போதும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான படுக்கை வசதிகளை அதிகரித்து, கூடுதல் டாக்டர்களை நியமித்து சின்னமனூர் மருத்துவமனையை காக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ