உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சட்டசபை தொகுதி வாரியாக பயிற்சி

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சட்டசபை தொகுதி வாரியாக பயிற்சி

தேனி : தேனி லோக்சபா தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் 6077 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி மார்ச் 24ல் தாலுகா வாரியாக 5 இடங்களில் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ள தொகுதி கம்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை அனுப்பும் பணி நேற்று துவங்கியது. பணி ஆணையில் அவர்கள் எந்த தொகுதியில் பணிபுரிய உள்ளனர் என்ற விபரங்கள் உள்ளன. இந்த பணி ஆணைகள் துறை உயர் அதிகாரிகள் மூலம் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இன்று மாலைக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பணி ஆணையில் உள்ள தொகுதியில் ஏப்.,7ல் நடைபெறும் 2ம் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை