உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன்பாட்டிற்கு வராத வேளாண் விரிவாக்க மையம்

பயன்பாட்டிற்கு வராத வேளாண் விரிவாக்க மையம்

கம்பம்: காமயகவுண்டன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையம் பயன்பாட்டிற்கே வராமல் உள்ளது.ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு விரிவாக்க மையம் ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் வழங்குவது, மானிய விலையில் இரு பொருள்கள், நுண்ணூட்ட உரங்கள் வழங்கும் பணி மேற்கொள்ளப்படும். விவசாயிகள் உதவி இயக்குனர் அலுவலகம் வராமலே விரிவாக்க மையத்திலேயே உரங்கள் பெற்றுக் கொள்ளவும், தொழில்நுட்பங்கள் தெரிந்து கொள்ள விரிவாக்க மையங்கள் பயன்படுகிறது. கம்பம் வேளாண் உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் காமயகவுண்டன்பட்டியில் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டடம் கட்டி பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் திறந்தனர். ஆனால் புதிய கட்டடத்தை திறந்து பயன்படுத்தாமல் பூட்டியே வைத்துள்ளனர். அதிகாரிகள் எங்கே என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். வேளாண் இணை இயக்குனர் விரிவாக்க மையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை