உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செயல் இழந்த வானிலை மையங்கள்; வெப்பநிலை கணக்கிடுவதில் சிக்கல்

செயல் இழந்த வானிலை மையங்கள்; வெப்பநிலை கணக்கிடுவதில் சிக்கல்

தேனி : தேனி மாவட்டத்தில் வேளாண் பல்கலை சார்பில் வைத்துள்ள தானியங்கி வானிலை மையம் சிலஇடங்களில் செயல்படாததால் வெப்பநிலை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மழைப்பொழிவை பேரிடர் மேலாண்மைத் துறையால் கணக்கிடப்படுகிறது. அதே போல் வெப்பநிலையை தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் வட்டாரங்கள் வாரியாக தானியங்கி வானிலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காலை 8:30 மணிக்கு வெப்பநிலை, காற்றின் வேகம், காற்றில் ஈரப்பதம், மண்ணில் உள்ள ஈரப்பதம், மழை அளவு, கதிர்வீச்சு அளவு உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு அறிக்கை tawn.tanu.ac.inஎன்ற இணையத்தில் வெளியிடப்படுகிறது.வேளாண் பல்கலை சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களிலும் கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆனால் போடி, சின்னமனுார், கடமலைக்குண்டு, தேனி வட்டாரங்களில் உள்ள தானியங்கி வெதர்ஸ்டேஷன்கள் பல மாதங்களாக இயங்காமல் உள்ளன. இதனால் வெப்பநிலை கணக்கிடுவதில் சிக்கல் நிலவுகிறது. இந்த இடங்களில் கருவிகள் செயல்படாததால் மாவட்டத்தில் சராசரி வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ் அதாவது 96.08 டிகிரி பாரன்ஹீட் என கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகிறது.தானியங்கி கருவிகள் இயங்காத இடங்களில் அதனை சரிசெய்து துல்லியமான வெப்பநிலை கணக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி