உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகராட்சியில் குப்பை அள்ளும் பணி தொய்வு : சுகாதாரகேடு அதிகரிப்பு

நகராட்சியில் குப்பை அள்ளும் பணி தொய்வு : சுகாதாரகேடு அதிகரிப்பு

சின்னமனுார்: சின்னமனுார் நகராட்சியில் குப்பை அள்ளுவதில் தேக்க நிலை உள்ளது. குறிப்பாக விரிவாக்கப் பகுதிகளில் கண்டு கொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது.இந்நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகரில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. விரிவாக்கப் பகுதிகளிலும், மின்நகர், லட்சுமி நகர், எழில்நகர், அண்ணாமலை நகர், அழகர்சாமி நகர், கோகுலம் நகர், சிவசக்தி நகர், கண்ணம்மாள் கார்டன் என தினமும் ஒரு காலனி உருவாகி வருகிறது.ஆனால் அங்கீகாரம் பெற்று அமைக்கப்படும் இந்த காலனிகளில் அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லாத அவல நிலை காணப்படுகிறது. குறிப்பாக சிவசக்தி நகரில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு தெரு விளக்குகள் இல்லை. குடிநீர் இணைப்பு வசதி கிடையாது. சாக்கடை கட்டப்படவில்லை. குப்பை அள்ளப்படுவது இல்லை. இங்கு வசிப்பவர்கள் சேகரமாகும் குப்பையை மேகமலைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. நகராட்சி கமிஷனர், துப்புரவு அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை