| ADDED : ஜூலை 24, 2024 06:11 AM
தேனி : தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து தேனி, உத்தமபாளையத்தில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேனி பங்களா மேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அரசு 3வது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியது, ரேஷனில் பருப்பு, பாமாயில் வழங்குவதை நிறுத்த முயற்சிப்பது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து கோஷமிட்டனர். தேனி நகர துணை செயலாளர் சுந்தரபாண்டியன், அவைத்தலைவர் முருகன், ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், கூடலுார் நகர செயலாளர் அருண்குமார், ஐ.டி.,பிரிவு நிர்வாகி பாலசந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.உத்தமபாளையம்மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, மாவட்ட பொருளாளர் இளையநம்பி , சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எல்லப்பட்டி முருகன், அனுமந்தன்பட்டி பேரூர் செயலாளர் மார்க்கண்டன், உத்தமபாளையம் நகர் செயலாளர் சக்ரவர்த்தி, ஒன்றிய செயலாளர் கல்யாணகுமார், அமைப்புசாரா ஒட்டுனர் அணி மாவட்ட செயலாளர் குறிஞ்சி மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.