உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தினகரனின் மறு உருவமும் தெரியும் மர்ம உருவமும் எனக்கு தெரியும் உதயகுமார் சஸ்பென்ஸ்

தினகரனின் மறு உருவமும் தெரியும் மர்ம உருவமும் எனக்கு தெரியும் உதயகுமார் சஸ்பென்ஸ்

வாடிப்பட்டி : ''தினகரனின் மறு உருவமும் தெரியும், மர்ம உருவமும் எனக்கு தெரியும்'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார்பேசியதாவது: தேனி தொகுதியில் 8 முறை அ.தி.மு.க., வென்றுள்ளது.2 முறை தான் தி.மு.க., வென்றுள்ளது. 10 ஆண்டுகள் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின் மீண்டும் தலைகாட்டி வருகிறார். என்னை 'பபூன்' என்று விமர்சித்துள்ளார்.பபூனால் எந்த தீமையும் ஏற்படாது. வில்லன் பி.எஸ்.வீரப்பா போன்றவர் தினகரன். வேட்பாளர் நாராயணசாமி ஹீரோ. இறுதியில் ஹீரோ தான் வெற்றி பெறுவார்.2 கோடி தொண்டர்களும் சீறும் சிங்கமாக மாறிவிட்டோம். தினகரனின் மறு உருவமும் தெரியும், மர்ம உருவமும் எனக்கு தெரியும்.தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.,விற்குவெற்றி பிரகாசமாக உள்ளதால் தோல்வி பயத்தில் தி.மு.க. 7 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டதுஎன்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ