உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

தேனியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கு வைகை அணையில் இருந்து நீர் எடுத்து சுத்திகரித்து வழங்கப்படுகிறது. நகராட்சி பகுதிகளில் 15 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் நீர் ஆறாய் ஓடியது. குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால் இன்று, நாளை(மே 24) ஆகிய இரு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை