உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போதையில் தகராறு: உறவினர் கட்டையால் தாக்கி கொலை; தந்தை, மகன் கைது

போதையில் தகராறு: உறவினர் கட்டையால் தாக்கி கொலை; தந்தை, மகன் கைது

சின்னமனுார் : தேனி மாவட்டத்தில் உறவினரை கட்டையால் தாக்கி கொலை செய்து உடலை முல்லைப்பெரியாற்றில் விட்டு சென்ற சீலையம்பட்டியை சேர்ந்த தந்தை மலைராமு 59, மகன் பவுன்ராஜ் 36, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.சின்னமனுார் சீலையம்பட்டி மலைராமு 56. இவரது உறவினர் முனியப்பன் 40. இவரை மலைராமு சிறுவயதில் இருந்தே தன் வீட்டில் வளர்த்து வருகிறார். முனியப்பன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். மனதளவில் பாதிக்கப்பட்ட மலைராமு இவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.இந்நிலையில் சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றில் முனியப்பன் உடம்பில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக சின்னமனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சுல்தான் பாட்சா மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கினர். அதில் ரீப்பர் கட்டையால் தாக்கி முனியப்பன் கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து, வி.ஏ.ஒ. மகேஸ்வரி புகாரில், கொலை வழக்கு பதிவு செய்தனர். பின் மலைராமு, அவரது மகன் பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை