மேலும் செய்திகள்
சுதந்திர தினவிழா முன்னேற்பாடு
08-Aug-2024
தேனி, : கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அவர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது.கூட்டத்தில் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவழங்கினர். சுயதொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கி கடன் பெறும் முறைகள் பற்றி விளக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயசேகர், தாட்கோ மேலாளர் சரளா, தொழில் மைய உதவி இயக்குனர் மோகன்ராஜ், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
08-Aug-2024