மிரட்டி பணம் கேட்டவர் கைது
பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி 10வது வார்டு உறுப்பினர் சென்றாயன் 34. (அ.தி.மு.க.,) அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கீழ வடகரை ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 30, கத்தியை காட்டி சென்றாயானிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். பணம் கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். வடகரை போலீசார் கார்த்திக் ராஜாவை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.-