உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி நகராட்சி வாகன காப்பகத்தில் கட்டண உயர்வு; வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

தேனி நகராட்சி வாகன காப்பகத்தில் கட்டண உயர்வு; வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி வாகன காப்பகங்களில் டூவீலர் நிறுத்த கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.15ஆக உயர்த்தியதால் வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தேனி நகராட்சி காமராஜர் பஸ் ஸ்டாண்டில் ஒன்று, கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் 4 வாகன காப்பகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் டூவீலருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தேனியில் இருந்து வேலை நிமித்தமாக வெளியூர் செல்வோர் பஸ் ஸ்டாண்டில் உள்ள வாகன காப்பங்களை பயன்படுத்தினர். இந்நிலையில் கமிஷனர் உத்தரவின்படி வாகன காப்பகங்களில் ஜூலை 26 முதல் டூவீலருக்கு ரூ.15 வசூலிக்கப்படும் என நகராட்சி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் டூவீலர்களை நிறுத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கட்டண உயர்வு குறித்து நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவிடம் கேட்ட போது, 'விலைவாசி உயர்வால் கட்டணத்தை உயர்த்த ஸ்டாண்ட் ஏலம் எடுத்திருந்தவர்கள் கோரினர். இதனால் கடைசியாக நடந்த கவுன்சில் கூட்டத்தில் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது,' என்றார்.நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா கூறுகையில், கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுதான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டணத்தை குறைக்க கோரிக்கை இதுவரை வரவில்லை. கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்படும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி