உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உச்சலூத்து வனப்பகுதியில் காட்டுத் தீ கனமழையால் வனத்துறையினர் நிம்மதி

உச்சலூத்து வனப்பகுதியில் காட்டுத் தீ கனமழையால் வனத்துறையினர் நிம்மதி

போடி: போடி அருகே உச்சலூத்து வனப் பகுதியில் ஏப்., 29 இரவு பரவிய காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தவித்த நிலையில், அப்பகுதியில் பெய்த கன மழையால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.போடி அருகே உத்தம்பாளையம் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட ராசிங்கபுரம், சூலப்புரம் மேற்கே உச்சலூத்து மலைப் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இங்கு உள்ள மரங்களுக்கு சமூக விரோத கும்பல் தீவைத்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக மரப்பட்டைகள், மரங்களை வெட்டி கடத்தப்படுவது, சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. கஞ்சா பயிரிடப்படுபவர்கள், கரிமூட்டம் போடுபவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள் தீ வைத்து வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வன விலங்குகள் அடிவார பகுதிக்கு வர துவங்கி உள்ளன.இந்நிலையில் ஏப். 29ல் மாலை 6:00 மணிக்கு மேல் போடி அருகே உச்சலூத்து வனப்பகுதியில் சமூக விரோத கும்பல் தீ வைத்ததால், பரவிய காட்டுத் தீயால் விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து கருகின. இதனால் வன உயிரினங்கள் பலியாவதோடு, வனவிலங்குகளும் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மிகவும் பள்ளமாக அமைந்து உள்ளதால் தீயை முழுவதும் அணைக்க முடியாத நிலையில் வனத்துறையினர் தவித்து வந்தனர். இதனை ஒட்டி ஏப்., 29 இரவு 10:15 மணிக்கு போடி பகுதியில் மின்னலுடன் கன மழை பெய்தது. ஒரு மணி நேர கன மழையால் எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ தாமாகவே அணைந்தது. இதனால் தவிப்பில் இருந்த வனத்துறையினருக்கு கனமழை நிம்மதியை தந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ