மேலும் செய்திகள்
மாநகர், மாவட்டத்தில் பரவலான மழையால் ஆறுதல்
12-Mar-2025
பெரியகுளம்; பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் சொர்க்கம், பெரியகுளம் சோத்துப்பாறை அணை மேல்மலைப்பகுதியான ஊரடி, ஊத்துக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை காட்டுத்தீ பரவியது. பெரியகுளம், தேனி வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். வெப்பம் தாக்கம் அதிகரிப்பால் நெருங்க முடியவில்லை. இதனால் சில அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் மலைப்பகுதியில் சாரல் மழையும், அவ்வப்போது மழையும் பெய்தது. இதனால் காட்டுத்தீ அணைந்தது. பெரியகுளம் தாலுகா முழுவதும் சாரல் மழை பெய்தது. இதனால் வனத்துறை, தீயணைப்பு துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.காட்டுத்தீ மர்மநபர்களால் வைக்கப்பட்டதா அல்லது வெப்பத்தால் தீ பரவியதா என வனத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.-
12-Mar-2025