உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் ஆடு, மாடு வியாபாரம் மந்தம்

ஆண்டிபட்டியில் ஆடு, மாடு வியாபாரம் மந்தம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துடன்கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்கள் தேவைக்காக கறவை மாடுகள், ஆடுகளை விற்பதும் வாங்குவதும்வழக்கமானதொடர்ச்சியாக நடக்கும்.கடந்த சில மாதங்களாக ஆண்டிபட்டி பகுதியில் கோடையின் தாக்கத்தால் கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கான தீவன தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.மேய்ச்சல் நிலங்கள் காய்ந்ததால் மேய்ச்சலுக்கும் கால்நடைகள் சென்று திரும்புவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பலரும் புதிதாக கறவை மாடுகள், ஆடுகள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகளும் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் இத்தொழிலை நம்பி இருந்தவர்களுக்கு வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை