| ADDED : ஜூன் 16, 2024 05:29 AM
கூடலுார்: லோயர்கேம்ப் அருகே பளியன்குடியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என குறைதீர் கூட்டத்தில் பழங்குடியின மக்கள் புகார் மனு வழங்கினர்.லோயர்கேம்ப் அருகே பளியன்குடியில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மக்கள் குறை தீர் கூட்டம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி தலைமையில் நடந்தது. பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கார்டுகளில் உள்ள பெயர் மாற்றம், பெயர் நீக்கம், முகவரி மாறுதல் உள்ளிட்டைவைகளுக்கு மனு பெற்று, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.நகராட்சி, வனத்துறை சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேல்நிலைத் தொட்டி, தரை தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. குடிநீர் சப்ளையும் இல்லை என பழங்குடியின மக்கள் புகார் மனு அளித்தனர்.பொது வினியோகத் திட்ட மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் புதுராஜா, வருவாய் துறையினர், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.