உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது: மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு அவசியம்

மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது: மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு அவசியம்

ஆண்டிபட்டி: மாவட்டத்தில் தொடரும் வறட்சியால் கிணறுகள், ஆழ்துளை குழாய்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததாலும், கடும் கோடை வெயில் தாக்கத்தால் குளம் கண்மாய்கள் வறண்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் விவசாயம், தொழில் மக்களின் அனைத்து அன்றாட தேவைக்கும் கிணறுகள், ஆழ்துளை குழாய்களில் சுரக்கும் நீரை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு பெய்த மழையில் குளங்கள், கண்மாய்களில் தேங்கிய நீர் ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீரை சமன் செய்தது. ஆற்றில் நீர் வரத்து ஏற்படும்போது கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகமாகும்.ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. நடப்பாண்டில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமானதால் பொது மக்களின் தண்ணீர் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. கிணறுகள் போர்வெல்களில் சுரக்கும் நீரை மோட்டார் மூலம் தொடர்ந்து உறிஞ்சி பயன்படுத்துகின்றனர்.கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சிமென்ட் ரோடு, தார் ரோடுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தரையில் விழும் நீர் உறிஞ்சப்படாமல் வாய்க்காலில் கலந்து நீண்ட தூரம் சென்று வெயிலில் ஆவியாகி வீணாகிறது. கடந்த காலங்களில் அரசு உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் மழை நீர் சேகரிப்பில் பொதுமக்களுக்கு ஏற்பத்திய விழிப்புணர்வால் ஓரளவு பலன் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து குடியிருப்புகள் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது தினமும் பல கோடி லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. நிலத்திற்குள் மீண்டும் நீரை அனுப்புவது குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் இல்லை.நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்பாட்டிற்கு பின் வீணாகும் நீரை நிலத்திற்குள் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை