உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வடிகால் வசதியின்றி சுகாதார பாதிப்பு

வடிகால் வசதியின்றி சுகாதார பாதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்பப்பட்டி ஊராட்சி அம்பேத்கர் நகரில் வடிவால் வசதி இன்றி மழை நீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது.இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வடிகால் வசதியின்றி ஆங்காங்கே தேங்கி விடுகிறது. தெருக்களில் சிமென்ட் ரோடு வசதி இல்லாததால் கழிவுநீரை மிதித்து பலரும் செல்கின்றனர். கழிவுநீருடன் மழை காலத்தில் தேங்கும் நீரால் பாதிப்பு மேலும் அதிகமாகிறது. தொடர்ச்சியான கழிவுநீர் தேக்கத்தால் கொசுத்தொல்லை, நோய் தொற்றுக்கு வழி ஏற்படுத்துகிறது. வடிகால் அமைக்க இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இப்பகுதியில் வடிகால் அமைக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ