உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடத்தை விதி அமலுக்கு வந்தும் மறைக்கப்படாத கல்வெட்டுகள்

நடத்தை விதி அமலுக்கு வந்தும் மறைக்கப்படாத கல்வெட்டுகள்

தேனி : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல கல்வெட்டுகள் மறைக்கப்படாமல் உள்ளன.ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 16ல் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதைத்தொடர்ந்து அரசு கட்டடங்களில் அரசியல் தலைவர்கள் திறந்து வைத்த கல்வெட்டுகள், அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூடப்பட்டன. சில இடங்களில் மாநில அரசின் திட்டங்கள் இடம்பெற்றுள்ள பலகைகளில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டன.ஆனால் தேனி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் அரசியல் தலைவர்கள் பெயர்கள் மறைக்கப்படாமல் உள்ளன. முதல்வர் ஸ்டாலின் பெயர் பதித்த கல்வெட்டுகள் தேனி பதிவாளர் அலுவலகம், சமதர்மபுரம் காமராஜர் பூங்கா, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள நகர்நல மையம், மாவட்ட மைய நுாலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்த கல்வெட்டு, புது பஸ் ஸ்டாண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் பதித்த மின் விளக்கில் உள்ள கல்வெட்டு, தாய்மார்கள் பாலுட்டும் அறை கல்வெட்டு உள்ளிட்டவை மறைக்கப்படாமல் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்றிட கோரிக்கை எழுந்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை