உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தேனி: மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், துவரம்பருப்பு, நிலக்கடலை, எள், பருத்தி ஆகிய வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.குறுவை பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காப்பீடு செய்யும் விவசாயிகள் பதிவு கட்டணம், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் நகல், இணைத்து காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும். பிரிமியம் தொகையாக ஏக்கருக்கு நெல் பயிர் ரூ.712, எள் ரூ.308 ஜூலை 31க்குள் காப்பீடு செய்ய வேண்டும். நிலக்கடலை ரூ.530, துவரை ரூ.308, சோளம் ரூ.284, மக்காச்சோளம் ரூ.580, பருத்தி ரூ. 1104 செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை