உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏல விவசாயிகளுக்கு பிரத்யேக செயலி அறிமுகம்; சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை அறியலாம்

ஏல விவசாயிகளுக்கு பிரத்யேக செயலி அறிமுகம்; சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை அறியலாம்

கம்பம் : ஏல விவசாயிகள் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய நவீன தொழில்நுட்பங்களை எளிதாக தெரிந்து கொள்ள கார்ட்ஸ் ஆப் எனும் பிரத்யேக செயலியை ஸ்பைசஸ் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.இடுக்கி மாவட்டம் மயிலாடும்பாறையில் உள்ள ஏலக்காய் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் , விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தகர்கள், ஆக்சன் நிறுவன பிரதிநிதிகள், விஞ்ஞானிகள் என பல தரப்பட்டவர்கள் பங்கேற்ற கூட்டம் ஸ்பைசஸ் வாரியம் நேற்று முன்தினம் நடத்தியது. ஸ்பைசஸ் வாரியத்தின் செயலர் கே.ஜி.ஜெகதீஷ் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கார்டஸ் ஆப் என்னும் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஏல விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வது, மண் பரிசோதனை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.மேலும் கோவை வேளாண் பல்கலை நறுமண பொருள்கள் மையம்( Spices incubation Centre )மற்றும் விவசாய சேவை மையம் ( Kisan Seva Kendra)துவக்கப்படும்.இந்த மையம் நறுமண பொருள்கள் குறிப்பாக ஏலக்காய் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் உடுப்பன்சோலை தாலுகா மற்றும் இடுக்கி மாவட்டத்தில் 19 கிராமங்களில் எடுக்கப்பட்ட மண் பரிசோதனை விபரங்கள், காய்ப்பு திறன் போன்றவை விளக்கப்பட்டது.ஏலக்காய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முருகன், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏல விவசாயத்தில் பாதிப்பு என்ற தலைப்பில் பேசினார். பிரபல மண்வள ஆராய்ச்சியாளர் ராதாகிருஷ்ணன் மண் பரிசோதனை பற்றி விளக்கினார். நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை