| ADDED : மே 17, 2024 06:53 AM
தேனி : தேனி, ஆண்டிப்பட்டி, உப்பார்பட்டி அரசு ஐ.டி.ஐ., க்களில் பிட்டர், எலக்ட்ரிசியன், டர்னர், வெல்டர், டி.டி.பி.ஓ., பம்ப் ஆப்பரேட்டர், உள்ளிட்ட பாடபிரிவுகள் ஓராண்டு, இரு ஆண்டுகள் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சிகளில் சேர குறைந்த பட்ச கல்வித்தகுதி 8 ம் வகுப்பு தேர்ச்சியாகும். ஐ.டி.ஐ.,களில் சேர www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில் உரிய சான்றிதழ்கள், விவரங்களுடன் ஜூன் 7 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஐ.டி.ஐ.,யில் படிப்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித்தொகை, விலையில் சைக்கிள், பாடப்புத்தகம், வரைபடக்கருவிகள், 2செட் யூனிபார்ம் வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு அரசு ஐ.டி.ஐ.,யில் விபரங்களை நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.