உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்னஞ்சலில் வங்கிக் கணக்கை மாற்றி ரூ.11.39 லட்சம் மோசடி மேலாளரை ஏமாற்றிய ஜப்பான் நபர்

மின்னஞ்சலில் வங்கிக் கணக்கை மாற்றி ரூ.11.39 லட்சம் மோசடி மேலாளரை ஏமாற்றிய ஜப்பான் நபர்

தேனி : மின்னஞ்சல் மூலம் வங்கி கணக்கை மாற்றி அனுப்பி ரூ.11.39 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி தனியார் மில் கணக்குப்பிரிவு மேலாளர் அப்துல்ஹக்கீம் 56, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.தேனியில் உள்ள தனியார் நுாற்பாலையில் கணக்குப் பிரிவில் மேலாளராக அப்துல்ஹக்கீம் பணிபுரிகிறார். இந்த நிறுவனத்திற்காக தனி மின்னஞ்சல் முகவரியை பராமரித்து வருகிறார். இதன் மூலம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த நிறுவனத்தில் நுால் இழைகள் வாங்கி, அதனை நுாலாக தயாரித்து கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்., 24ல் ஒரு மின்னஞ்சல் முகவரில் இருந்து இன்வாய்ஸ் பில், பணத்தை டோக்கியோ நிறுவன கணக்கிற்கு செலுத்த கூறியிருந்தது. மறுநாள் அந்த மின்னஞ்சலில் இருந்து வேறு ஒரு வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்த கூறியிருந்தது. இதனை நம்பிய அப்துல்ஹக்கீம், குறிப்பிடப்பட்டு இருந்த வங்கி கணக்கிற்கு ரூ.11.39 லட்சத்தை செலுத்தினார். பின் டோக்கியோ நிறுவன மின்னஞ்சலில் கேட்ட போது குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கு தங்களுடையது இல்லை என தெரிவித்தனர். அந்த நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் வங்கி கணக்கை மாற்றி, ஏமாற்றி வாங்கிய பணத்தை மீட்டு தருமாறு தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை