உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கவுமாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் நடுவிழா

கவுமாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் நடுவிழா

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு சாட்டுதல் மற்றும் கம்பம் நடுவிழா கோலாகலமாக நடந்தது.பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8ல் துவங்குகிறது. முன்ன தாக நேற்று முன்தினம் (ஜூலை 2) மாலை 6:30 மணிக்கு வடகரை வரதப்பர் தெரு காமுத்துரை பாண்டி பூஜாரி வீட்டிலிருந்து மேளதாளத்துடன் கரகம், கம்பம் வீதி உலா வந்தது. கோயிலில் இரவு 9:00 மணிக்கு பூஜாரிகள் கம்பம் நட்டனர். ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 16 மாவிளக்கு, ஜூலை 17 ல் அக்னிசட்டி, ஜூலை 23ல் மறுபூஜை நடக்கிறது. திருவிழா நாட்களில் அம்மன் தினமும் பல்வேறு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை