உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குச்சனுார் கோவில் வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

குச்சனுார் கோவில் வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை:தேனி மாவட்டம் குச்சனுார் சுயம்பு சனீஸ்வர் பகவான் கோயில் அறங்காவலர் பிரபாகரன். உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில் நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் 2023 ல் உத்தரவிட்டது. அதற்கு கோயில் செயல் அலுவலர், தக்கார் தயாராக இல்லை. முறையாக நிர்வகிக்கவில்லை. கோயில் சன்னதியின் சில பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன. இருவரும் கோயில் நலனிற்கு எதிராக செயல்படுகின்றனர். இருவரும் செயல்பட தடை விதிக்க வேண்டும். அவர்கள் எவ்வித கட்டுமானம் மேற்கொள்ள, கட்டுமானங்களை அகற்ற, டெண்டர் விட, பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஆர்.விஜயகுமார் ,திண்டுக்கல் அறநிலையத்துறை இணைக் கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்கள் ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை