உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பக்கத்து வீட்டில் நகை திருடிய கூலித்தொழிலாளி கைது

பக்கத்து வீட்டில் நகை திருடிய கூலித்தொழிலாளி கைது

தேனி: ஓடைப்பட்டி வெள்ளையம்மாள்புரத்தில் பக்கத்து வீட்டில் நகை திருடிய கூலித்தொழிலாளி செல்வத்தை 32, போலீசார் கைது செய்தனர்.வெள்ளையம்மாள்புரம் விநாயகர் கோயில் தெரு கூலித்தொழிலாளி அறிவுச்செல்வம் 46.இவரது மகன் மனோ வீட்டில் பீரோவில் இருந்த பள்ளிச் சான்றிதழை எடுத்தார். பின் பீரோவை பூட்டிச் சென்றார். அதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்கச் செயின், 2 ஜோடி வெள்ளி கொலுசு, 2 ஜோடி வெள்ளி அரைஞான் கயிறு ஆகிய ரூ.1.80 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றார். அறிவுச்செல்வம் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., பாண்டிச்செல்வி தலைமையிலான போலீசார் செல்வத்திடம் விசாரித்து, ரூ.1.71 லட்சம் மதிப்பிலான 3 பவுன் தங்க செயினை மீட்டனர். செல்வத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை