உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாதிரி பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை; தாகத்தால் தவிக்கும் மாணவர்கள்

மாதிரி பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை; தாகத்தால் தவிக்கும் மாணவர்கள்

தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க பள்ளி கல்வித்துறை கூடுதலாக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்குநடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 2000 மாணவர்கள், மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் குடிப்பதற்கு சில்வார்பட்டி ஊராட்சியில் இருந்து குடிநீர், பள்ளி வளாகத்தில் 7500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இதே நீரில் சத்துணவு சமையல் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. மதியம் 1:00 மணிக்கு தண்ணீர் தீர்ந்து விடுகிறது. சில நேரங்களில் ஊராட்சியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்வது இல்லை. அப்போது மாணவர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. பள்ளி கல்வித்துறை மாதிரி மேல்நிலைப்பள்ளியாக உள்ள இப்பள்ளியில் உடனடியாக கள ஆய்வு செய்து கூடுதலாக 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ