| ADDED : ஆக 15, 2024 03:50 AM
தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் ம.தி.மு.க., சார்பில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தல்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கட்சியின் சட்டத் திட்ட திருத்தக்குழு செயலாளர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பாஸ்கரன், பொருளாளர் பரசுராமன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்முடி, பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.பெண் போலீசை தாக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் மூணாறு, ஆக.15---இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் பணியின் இடையே பெண் போலீசை தாக்கிய போலீஸ்காரர் பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் பஸ் ஸ்டாண்ட் அருகே கோவா கவர்னர் ஸ்ரீதரன்பிள்ளையின் வருகையை ஒட்டி பெண் போலீஸ் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரிம், முட்டம் போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த போலீஸ்காரர் சினாஜ் வாக்குவாதம் செய்து தாக்கினார்.இச்சம்பவம் தொடர்பாக தொடுபுழா டி.எஸ்.பி. விசாரணை நடத்தி இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப்பிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி சினாஜை பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.