உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அதிக புகை வெளியிடும் வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை: வாகன புகை சான்றிதழ் வைத்திருப்பதும் அவசியம்

அதிக புகை வெளியிடும் வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை: வாகன புகை சான்றிதழ் வைத்திருப்பதும் அவசியம்

தேனி: மாவட்டத்தில் இயங்கும் பெரும்பாலான வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவு, மாசுகட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவை விட அதிகமாக இருப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அதிக புகையை வெளியிட்டு செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசாருக்கும், வாகனங்களை பறிமுதல் செய்ய வட்டார போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்க எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.தேனி மாவட்டம் கேரள எல்லையில் உள்ளதாலும், மதுரை, திண்டுக்கல் செல்லும் பைபாஸ் ரோடுகளிலும், நகர் பகுதிகளிலும் வாகன போக்குவரத்து மிகவும் அதிகரித்துள்ளது. விளை பொருட்களை மாவட்டங்களுக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், வணிக நிறுவனங்களின் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் அதிகரித்துள்ளன. மேலும், கடந்த 10 ஆண்டுகள் கணக்கின் படி தேனி மாவட்டத்தில் பொது போக்குவரத்தில் செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை குறைந்து, கார், டூவீலர்கள் அதிகரித்ததால் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளன.மாசுகட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்து ஆணைய விதிமுறையின் படி டீசல் வாகனங்களில் கார்பன் அளவு 65 எஸ்.யூ.வி.,க்கு குறைவாகவும், பெட்ரோல் வாகனங்களில் கார்பன் மோனாக்சைடு துகள்கள் 4500 பி.பி.எம்..க்கு குறைவாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவை கண்டு கொள்ளாமல் பெரும்பாலான வாகனங்கள் தேனி மாவட்ட ரோடுகளில் கரும்புகையை கக்கிச் செல்கின்றன. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.புகை அதிகமாக வர காரணம் வாகனங்களில் இன்ஜின் குறைபாடு, இன்ஜின் ஆயில் குறைபாடு, நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிக எடை ஏற்றுதல், மிக பழைய, ஓட்டுவதற்கு லயக்கற்ற வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. ஆனால் விதியை மீறி பல வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

வாகன இயக்கத்திற்கு தடை

தேனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கூறுகையில், வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை புகை பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டியது அவசியம். சான்றிதழ் இல்லாத வாகன ஓட்டிகளில் ரூ.250 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்க மோட்டார் வாகன சட்டத்தில் இடமுண்டு. தேனியில் ஒரு சில ஆட்டோக்கள், மினிபஸ்கள் அதிக புகையை வெளியிட்டு செல்கின்றன.இவற்றை கண்டறிந்து அபராதம் விதித்து, வாகனங்கள் இயக்க தடை விதிக்க வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைப்போம்.', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை