உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்

தேனியில் திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்

தேனி : தேனி நகராட்சி பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது.தேனி நகராட்சி அரண்மனைப்புதுார் விலக்கில்இருந்து முல்லைபெரியாற்று பாலம் வரை நகராட்சி எல்லையாக உள்ளது. இந்த ஆற்றுப்பாலத்தின் அருகே சில சமூக விரோதிகள் குப்பை கொட்டி வந்தனர். சில நாட்களாக மருத்துவமனை கழிவுகள் கொட்டுகின்றனர். இந்த குப்பையில் நோயாளிகளுக்கு பயன்படுத்திய மருந்து குப்பிகள், ஊசி, மாத்திரை அட்டை, காயங்களில் சுற்றப்பட்டிருந்த பஞ்சு உள்ளிட்டவை கிடந்தன. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதே போல் சில நாட்களுக்கு முன் தேனி டி.எஸ்.பி., அலுவலகம் பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் நகராட்சி எல்லைபகுதியில் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. நகராட்சி சுகாதார பிரிவினர் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை