| ADDED : ஜூன் 02, 2024 04:14 AM
மூணாறு: மூணாறில் மருத்துவ குணம் கொண்ட பொருட்களுக்கு மவுசு அதிகம் என்பதால் கடும் கிராக்கி நிலவுகிறது.தமிழகத்தில் கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் மூணாறில் கிடைப்பதில்லை. அதனால் அவை தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. குறிப்பாக முருங்கை கீரை, நுங்கு தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. முருங்கை கீரை நகரில் மட்டும் விற்கப்படும் நிலையில், மூணாறு, உடுமலைபேட்டை ரோடு, கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் பல இடங்களில் நுங்கு விற்கப்படுகின்றது. அதனை சங்கரன்கோவில் சுற்று பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.அந்த பட்டியலில் தற்போது நாவல்பழம் இடம் பிடித்துள்ளது. ஆந்திரா,விஜயவாடா பகுதியில் இருந்து முதன் முதலாக நாவல்பழம் கொண்டு வரப்பட்டு திருநெல்வேலி சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பலர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். கிலோ ரூ.400 க்கு விற்கப்படுகிறது. அதனை சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். மூணாறில் மருத்துவ குணம் கொண்ட பொருட்களுக்கு மவுசு அதிகம் என்பதால் அவற்றிற்கு கடும் கிராக்கி நிலவுகிறது.