உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் தேசிய தர மதிப்பீடு குழு ஆய்வு

கல்லுாரியில் தேசிய தர மதிப்பீடு குழு ஆய்வு

தேவதானப்பட்டி: மேரிமாதா கலை, அறிவியல் கல்லுாரியில் தேசிய மதிப்பீடு அங்கீகார கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்தனர்.தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கலை,அறிவியல் கல்லூரியில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) குழுவினர் இரு தினங்களாக ஆய்வு நடத்தினர். குழுவில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியின் இயக்குனர் டாக்டர் ஜே. எஸ். பட், கோல்வாட் கேம்பஸ் கம்ரேஸ், சூரத், குஜராத் சிறப்பு உறுப்பினர்களான திருவனந்தபுரம் கேரள ஆங்கில இன்ஸ்டியூட் பேராசிரியர் டாக்டர் பாலகோவிந்தன் ஹரிஹரன், மகாராஷ்டிரா புல்தானா ஜி.எஸ். அறிவியல் கலை மற்றும் வணிகவியல் பேராசிரியர் டாக்டர் தேவேந்திர வியாஸ் ஆகியோர் கல்லூரியின் கல்வித்தரம், உள் கட்டமைப்பு, ஒட்டுமொத்த செயல் திறனை மதிப்பீடு செய்தனர். ஆய்வினை குழுவினர் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) கமிட்டிக்கு பரிந்துரைத்துள்ளது. முன்னதாக இந்த குழுவினரை கல்லூரி முதல்வர் பி.ஜெ.ஐசக் பூச்சாங்குளம், துணை முதல்வர் ஜோஷிபரம் தொட்டு, நிர்வாக இயக்குனர் பிஜோய் மங்களத்து, மாணவர்கள், மாணவிகள் வரவேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை