உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்து ஒருவர் பலி

விபத்து ஒருவர் பலி

போடி: போடி காந்திஜி காலனியை சேர்ந்தவர் சீனிவாசகன் 64. இவர் வலசத்துறை ரோட்டில் முருகன் என்பவர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று டூவீலரின் முன் சீட்டில் இவரது தம்பி மகன் சந்தோஷ், பின் சீட்டில் முத்துமணி, வினோத்குமாரை அமர வைத்து ஊத்தாம்பாறை ரோட்டில் ஓட்டி வந்துள்ளார். எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்ட போது நிலை தடுமாறியதில், அருகே இருந்த தரை பாலத்தின் பள்ளத்தில் டூவீலருடன் விழுந்துள்ளார். பலத்த காயம் அடைந்த சீனிவாசகன் சம்பவ இடத்திலே இறந்தார். சந்தோஷ் உட்பட மூவர் காயம் அடைந்தனர். குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை