உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேரிடர் மீட்பு உபகரணங்களின் விபரம் பதிவேற்ற உத்தரவு

பேரிடர் மீட்பு உபகரணங்களின் விபரம் பதிவேற்ற உத்தரவு

தேனி : பேரிடர் மீட்பு உபகரணங்கள் இருப்பு விவரத்தை இணையதளத்தில் பதிவேற்ற ஆய்வு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். வட்ட அளவில் முன்னெச்சரிக்கை செய்ய, தேடுதல், மீட்பு பணிக்கு என தனித்தனி குழுக்கள் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் மண்சரிவு, வெள்ள அபாயம் உள்ள 43 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்படும் பகுதியில் குமுளி மலைரோடு, போடி மெட்டு ரோடு உள்ளது. மாவட்டத்தில் பொதுமக்கள் தங்க 66 முகாம்கள் உள்ளன. பேரிடர் காலத்தில் ஆப்தமித்ரா திட்டத்தில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை பயன்படுத்துவது. நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் மணல் மூடைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.போலீஸ், வனத்துறை, ஒன்றிய அலுவலகம், வேளாண் பொறியியல் துறை, போக்குவரத்து கழகத்தினரிடம் இருப்பு உள்ள பேரிடர் மீட்பு உபகரணங்கள் விபரங்களை பேரிடர் மேலாண்ணை இணையத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை