உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம்

போடி : போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர்காந்தி தலைமையில் நடந்தது.செயலாளர் செல்வராஜ், இணைச் செயலாளர்கள் சந்திரசேகரன், பரமசிவம், பொருளாளர் தேவகவுடா முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ரபி அகமது வரவேற்றார்.கூட்டத்தில் ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் குறைகளை நிவர்த்திசெய்யவும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள பழைய மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், பழையஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அனைத்து துறைகளும் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் அரசு முன்வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ