| ADDED : ஜூலை 30, 2024 06:14 AM
பெரியகுளம் : பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட்ற்குள் நீண்ட துார பஸ்கள் வராததால் பயணிகள் இன்றி வெறிச்சோடியது. 24 மணி நேரமும் சமூக விரோதிகள் மது பாட்டில்கள் விற்பனை செய்வதால் திறந்த வெளி பார் ஆக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது பெரியகுளம் நகராட்சியில் வடகரையில் 1993ல் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கியது. இங்கு தினமும் பல்வேறு ஊர்களுக்கு காலை முதல் இரவு வரை 300 க்கும் அதிகமான பஸ்கள் வந்து சென்றது. தேனியில் இருந்து வரும் திருப்பூர், கோவை உள்ளிட்ட நீண்ட துார பஸ்கள் பஸ்ஸ்டாண்டிற்குள் வராமல் வத்தலக்குண்டு -தேனி மெயின் ரோட்டிலே பயணிகளை இறக்கி, ஏற்றி சென்றன. இதனை பின்பற்றி மற்ற பஸ்களை பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து செல்கிறது. அரசு பஸ் டெப்போ எதிரே ரோட்டில் பயணிகளை இறக்கி சென்றன. பஸ்கள் புறக்கணிப்பால் பெரியகுளத்தில் இருந்து 30 ஆண்டுகளாக சென்னைக்கு தினமும் மாலையில் 3 பஸ்கள் கிளம்பியது. பயணிகள் வரத்து இன்றி முன்பதிவு மையம் மையம் மூடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் அபிவிருத்தி பணிகளுக்கு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி செலவில் மேற்கூரை, இருக்கைகள், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்குள்ள 18 கடைகள், ஒரு ஓட்டல் மூலம் நகராட்சிக்கு மாதம் ரூ.1.5 லட்சம் வாடகை கிடைக்கிறது. இதுதவிர கடைகளுக்கு 15 மாத முன்பணம் செலுத்தி கடை நடத்துகின்றனர். ஆனால் நீண்ட துாரம் செல்லும் வெளியூர் பஸ்கள் வராததால் ஒருசில பஸ்கள் மட்டுமே வருவதால் பயணிகள் வருகை குறைந்து வெறிசோடியது. திறந்த ஒரே நாளிலே புறக்காவல் நிலையம் மூடப்பட்டதால் 24 மணி நேரம் சமூக விரோதிகள் சிண்டிகேட் அமைத்து மது விற்பனை செய்யப்படுகிறது. பஸ் ஸ்டாண்டுக்குள் டிராக்டர், ஆட்டோ, சரக்கு வேன்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. வியாபாரிகள் வேதனை
சேதுராமலிங்கம், பெரியகுளம்: பஸ் ஸ்டாண்ட்டில் டீக்கடை ஓட்டல் உட்பட 20 க்கும் அதிகமான கடைகள் மாதம் தலா ரூ.6 ஆயிரம் வீதம் வாடகை கொடுத்து நடத்துகிறோம். பெரும்பாலன பஸ்கள் வராததால் பயணிகள் வருகை இன்றி வியாபாரம் மந்தமாக உள்ளது. அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நகராட்சியும், போக்குவரத்து துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதி தேவை
முத்து, பெரியகுளம்: பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி இல்லை. இருக்கைகள் மற்றும் நடைபாதையில் மது போதையாளர்கள் தூங்கும் இடமாக மாறி உள்ளது. இதுதான் பஸ் ஸ்டாண்ட் வளாகப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் சங்கடப்படுகின்றனர். மூடிய போலீஸ் புறக்காவல் நிலையம் திறக்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.